கட்டட அனுமதிக்கு இனி, பி.எப்., இல்லை; சபாஷ் முதல்வரே!
கட்டட அனுமதிக்கு இனி, பி.எப்., இல்லை; சபாஷ் முதல்வரே!
UPDATED : மே 13, 2026 06:55 AM
ADDED : மே 13, 2026 12:12 AM

-நமது நிருபர்-
முன்பு அ.தி.மு.க., ஆட்சியின்போது சதுர அடிக்கு 25 ரூபாயாக இருந்த இந்த 'பார்ட்டி பண்ட்', தி.மு.க., ஆட்சியில் 27 ரூபாயாக அதிகரித்ததே தவிர, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இவ்வழக்கம் மாறவில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, இந்த அடாவடி வசூல் தொகையும் அதிகரித்துக் கொண்டே தான் போனது.
இந்நிலையில்தான், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பதவியேற்றபின், நகர ஊரமைப்பு இயக்ககம் எடுத்த முடிவின்படி, இனி, எந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் 'பார்ட்டி பண்ட்' வசூலிக்கப்படமாட்டாது என்றும், தகுதி உடைய விண்ணப்பங்களுக்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விஷயத்தை ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்கும் பயனாளிகளுக்கு தெரிவிப்பதுடன், அவர்களிடம் பார்ட்டி பண்ட் எதுவும் பெறக்கூடாது. அப்போதுதான், அரசின் நடவடிக்கை முழுமையாக மக்களை சென்றடையும் .
சபாஷ் முதல்வரே!
இது நல்லதொரு தொடக்கம். இதுபோன்ற இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை, உங்களை நம்பி வாக்களித்த மக்கள் ஆவலுடன் எதிபார்க்கின்றனர்.
