அருட்காட்சியகத்தில் இருந்து நேரு ஆவணங்கள் காணாமல் போகவில்லை: பார்லியில் மத்திய அரசு தகவல்
அருட்காட்சியகத்தில் இருந்து நேரு ஆவணங்கள் காணாமல் போகவில்லை: பார்லியில் மத்திய அரசு தகவல்
ADDED : டிச 16, 2025 10:41 AM

நமது நிருபர்
நேருவின் ஆவணங்கள் காணாமல் போனதாக சில அறிக்கைகள் இருந்தாலும், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 2025ம் ஆண்டு ஆய்வின் படி எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் ராஷ்டிரபதி பவனின் தெற்கு பகுதியில் மாருதி வளாகத்தில் பிரதமர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய அனைத்து பிரதமர்கள் பற்றிய தகவல்கள், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ஆவணங்கள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற இந்தியப் பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆண்டு பொதுக்குழுவில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பதில்:
நேருவின் ஆவணங்கள் காணாமல் போனதாக சில அறிக்கைகள் இருந்தாலும், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 2025ம் ஆண்டு ஆய்வின் படி எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை. ஆண்டுதோறும் ஆவண தணிக்கை நடத்துவது இல்லை.
அருங்காட்சியக ஆண்டு பொதுக்குழுவில் நேரு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்பட்டாலும் ஆவணங்கள் ஆய்வின் போது ஏதும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு கஜேந்திர சிங் கூறியுள்ளார்.

