வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்: வானிலை மையம்
வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும்: வானிலை மையம்
ADDED : அக் 15, 2026 04:24 PM

- நமது நிருபர்-
சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் துரை நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகியது.
கரூர் தோகைமலையில் 11 செமீ, நாகை மற்றும் தர்மபுரியில் தலா 8 செமீ மழை பதிவாகியது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி மற்றும் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைவாக பதிவாகி இருக்கிறது. முன்பு 2002ல் 45 சதவீதம், 2012ல் 23 சதவீதம் 2014ம் ஆண்டு 20 சதவீதம் குறைவாக பதிவாகி இருந்தது.
வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. இயல்பான அளவு மழை பெய்யலாம். வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பதிவாகக்கூடும்.
சூப்பர் எல்நினோ காரணமாக பெருவெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. கடந்த ஆண்டை போல் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
