தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்

இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்

இன்று இரவு விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-03 செயற்கைக் கோள்

2


ADDED : அக் 30, 2026 08:54 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 30, 2026 08:54 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

இஸ்ரோ இன்று (அக்டோபர் 30) இரவு 11:51 மணிக்கு, இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், என்விஎஸ்-03 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக உருவான இந்தியாவின் 'நேவிக்' நெட்வொர்க்கில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, துல்லியமான இருப்பிடச் சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த செயற்கைக்கோளில் அகமதாபாத் இஸ்ரோ மையத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.

2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இது பொதுமக்களின் இருப்பிடச் சேவை, பேரிடர் மேலாண்மை, ரயில்வே போக்குவரத்து மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்புத் தேவைகளுக்கு பெரிதும் பயன்படும். செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us