மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்; டில்லியில் 4 பேர் கைது
மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்; டில்லியில் 4 பேர் கைது
UPDATED : டிச 11, 2025 04:54 PM
ADDED : டிச 11, 2025 04:31 PM

புதுடில்லி: டில்லி போலீசார் ரூ.3.5 கோடிக்கும் அதிகமான, செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில், கள்ள நோட்டுகள், செல்லாத ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். ஷாலிமர் பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே சந்தகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இடம் இருந்த பையை சோதனையிட்டதில் அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
அவை அனைத்தும் செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.3.5 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை டில்லி போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

