ஜூலையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஓமன் துணை விமானி; கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியது அம்பலம்
ஜூலையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட ஓமன் துணை விமானி; கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியது அம்பலம்
UPDATED : அக் 05, 2026 07:00 PM
ADDED : அக் 05, 2026 06:55 PM

அபுதாபி: துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தை தகர்க்க முயன்ற ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின்றன.
விசாரணையில் அவர் கூறியதாக இஸ்ரேலின் ஹீப்ரு ஊடகம் வெளியிட்ட செய்தியில்,
@nextcolumn@இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை தகர்க்க அவர் திட்டமிட்டார். ஸ்மிட் மச்சார், தரையிறங்குவதற்கான அனைத்து அனுமதியையும் பெற்ற பிறகு, அவரை கொல்ல திட்டமிட்டார். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடந்ததை போல் தாக்குதல் நடத்த சதி செய்தார் எனக்கூறியது.
ஓய்நெட் ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளிடம் அல் ஹமாமி அளித்தவாக்குமூலத்தில், ''ஜோர்டான் வான்பரப்பில் விமானம் பறந்த போது
@nextcolumn@மச்சாரை தாக்கினேன். 'கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டும். இதனால் அடுத்த என்ன நடக்கும் என்பதை யாரலும் உணர முடியாது. தனது திட்டத்தையும் யாராடும் தடுக்க முடியாது' என்று நம்பினேன். விமான நிலையத்தை தாக்க முடியாவிட்டால், டெல் அவிவில் உள்ள பெரிய கட்டடம் அல்லது ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது மோத வைத்திருப்பேன்'' எனக்கூறினார் இவ்வாறுஅந்த செய்தியில் கூறப்பட்டது.
இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்ட செய்தியில்,'' அல் ஹம்மாமி முதலில் ஜூலையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார். ஆனால், ஊழியர்களில் ஒருவர் நண்பராக இருந்ததால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றினார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது என்பது நீண்டகால திட்டம். இதற்காக டெல் அவிவ் நகருக்கு எந்த விமானம் செல்கிறது என ஆராய்ந்தார். பின்னர் பிளைதுபாய் நிறுவனத்தில் இணைந்தார். அதன் பணியாளராக பல முறை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு அல் ஹமாமி சென்றார். ஜூன் மாதம் இஸ்ரேல் சென்ற போது, தாக்குதலுக்கு தேவையான உளவு தகவல்களை திரட்டினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
