தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓமன் துணை விமானி!

யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓமன் துணை விமானி!

யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓமன் துணை விமானி!

10


ADDED : அக் 02, 2026 09:09 PM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : அக் 02, 2026 09:09 PM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

பிளை துபாய் விமானத்தில் தாக்குதல் நடத்திய ஓமன் துணை விமானி, சமூக ஊடகத்தில் யூதர்களை கொல்வது குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி சுமித் மச்சாரை தாக்கிய ஓமன் துணை விமானி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் மத அடிப்படைவாதி என நேற்று தெரிந்தது.

இஸ்ரேலிய ஊடகம்' The Times of Israel' வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: துணை விமானி ஜிகாதி சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்தார் என்பதை அவரது சமூக வலைதள கணக்குகள் காட்டுகின்றன. அதில், யூதர்களை கொல்வது குறித்து விவாதித்துள்ளார். இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் தற்கொலை செய்ய தயாராக இருந்தார்.

அவரின் நோக்கத்தை விசாரணை முடியும் வரை உறுதியாக கூற முடியாது. ஆனால், அவர் அநேகமாக விமானத்தை வீழ்த்த முயற்சித்து தற்கொலை செய்ய திட்டமிட்டது தெளிவாக தெரிகிறது என்றனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்த பேட்டியில்,'' தாக்குதல் நடத்திய ஓமன் விமானி விமானத்தை வீழ்த்த நினைத்தார். மத அடிப்படை சித்தாந்த போதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். பயணிகள் பிடிதத் உடன், 'என்னை கொல்லுங்கள்' என்று விமான பணிப்பெண்களிடம் கத்தினார். அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தது தெளிவாகிறது. அதில் சந்தேகம் இல்லை,'' என்றார்.

துணை விமானியின் உடைமைகளில், '' சுதந்திர பாலஸ்தீனம் குழுக்களின் துண்டு பிரசாரம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொருட்கள் இருந்தது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவையும், யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் அவர் பல முறை வெளிப்படுத்தியுள்ளார் '' என ஐநியூஸ் 24 நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us