ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு: ஒரே குரூப்பில் இந்தியா பாகிஸ்தான்
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு: ஒரே குரூப்பில் இந்தியா பாகிஸ்தான்
ADDED : அக் 01, 2026 10:28 PM

லண்டன்: ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது. ஒரு குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஐசிசி நடத்தும் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென் ஆப்ரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் நடக்க உள்ளது. அக்.,2 ல் துவங்கும் இப்போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. 12 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில்
இந்தியா, ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம் பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில்
நியூசிலாந்து,தென் ஆப்பிரிக்கா,இலங்கை,இங்கிலாந்து,வங்கதேசம் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம் பெற்றுள்ளன.
அக்.,2 ல் துவங்கும் போட்டியில் தகுதிச் சுற்றில் தேர்வு பெறும் அணி விளையாடுகிறது.
இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 7 ல் எதிர்கொள்கிறது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் உடனான போட்டி அக்டோபர் 10 ல் நடக்கிறது.இறுதிப்போட்டி ஜோக்கன்னஸ்பெர்க் நகரில் நவம்பர் 21ம் தேதி நடக்கிறது.
