தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஓடி ஒளியும் எதிர்க்கட்சிகள்; மத்திய அரசு குற்றச்சாட்டு

ஓடி ஒளியும் எதிர்க்கட்சிகள்; மத்திய அரசு குற்றச்சாட்டு

ஓடி ஒளியும் எதிர்க்கட்சிகள்; மத்திய அரசு குற்றச்சாட்டு

4


UPDATED : ஆக 12, 2026 06:01 PM

ADDED : ஆக 12, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : ஆக 12, 2026 06:01 PM ADDED : ஆக 12, 2026 05:55 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லிமெண்ட் விவாதங்களில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் விலகி ஓடுவது விரக்தியை தருகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.

பார்லி. வளாகத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது;

பார்லி.யில் அரசாங்கம் ஒரு விவாதத்தை விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகி ஓடும் சூழல் காணப்படுகிறது. மிகுந்த விரக்தியை தருகிறது. பார்லிமெண்ட் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் தான் விவாதத்தை கோரும். ஆளும் அரசாங்கம் அதற்குரிய பதில்களை வழங்கும்.

என் வாழ்வில் முதன்முறையாக ஒரு அரசு விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ அதில் இருந்து ஓடி ஒளிகிறது. அரசு சொல்வதை கேட்க மறுக்கிறது. இப்படியான ஒரு சூழலை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

பலமுறை விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இன்றும் கூட விவாதத்தை உடனே தொடங்குமாறு எதிர்க்கட்சிகளை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்களிடம் அதற்கான தைரியம் இல்லை. இது நாட்டுக்கும் நல்லதல்ல.

விவாதம் இல்லை என்றால் ஒரு பார்லிமெண்ட் எவ்வாறு இயங்க முடியும்? எதிர்க்கட்சிகள் எதையுமே செவி சாய்க்கவில்லை, ஒரு அரசானது தனது கருத்துளை பார்லி.யில் முன் வைக்கவோ அல்லது அதற்கு பதிலளிக்கவோ முடியாது.

பதாகைகளை ஏந்துவது, முழக்கமிடுவது, திட்டுவது இப்போது காங்கிரசின் இயல்பாகிவிட்டது. மக்களை திட்டுவது தான் ஒரே வேலை என்று காங். எம்பிக்கள் நினைக்கின்றனர்.

நாளை (ஆக.13) கூட்டத்தொடரின் கடைசி நாள். இன்றும் நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us