ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேச தயார்: மதுரையில் நயினார் பேட்டி
ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேச தயார்: மதுரையில் நயினார் பேட்டி
ADDED : செப் 06, 2025 09:42 PM

மதுரை: 'ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்', என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.இவர்கள் இருவரும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் மதுரையில் நயினார் நகேந்திரன் அளித்த பேட்டி:ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.பாஜ., கூட்டணியை விட்டு தினகரன், ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது.யாரும் வெளியேறியதற்கு நான் காரணம் அல்ல.
செங்கோட்டையன் பேச்சுக்கு பின்னால் பாஜ இல்லை. யாருடைய பின்னணியிலும் தமிழக பாஜ, அகில இந்திய பாஜவும் இல்லை.அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.