மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணி; பிரதமர் மோடி உறுதி
மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணி; பிரதமர் மோடி உறுதி
ADDED : செப் 24, 2026 10:17 AM

புதுடில்லி: மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொது வாழ்வில் பிரதமர் மோடி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, பாஜ சார்பில் 'சேவா சங்கல்ப் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாக மோட்டார் சைக்கிள் யாத்திரை கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கியது. குஜராத்தின் வாட்நகரில் இருந்து வாரணாசி வரை பயணிக்கும் 10 குழுக்களைச் சேர்ந்த சேவா யாத்திரீகர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:
இந்த சேவா யாத்ரீகர்கள், வத்நகரிலிருந்து வாரணாசி வரை 10 குழுக்களாக இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரை அடிமட்ட அளவில் பொதுமக்களுடனான தொடர்பு, இளைஞர்களின் ஈடுபாடு, சமூக நலன் மற்றும் கலாசார ரீதியான உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நற்காரியம்
சேவை ஆற்றுங்கள்!
2047க்குள்!
