ADDED : நவ 15, 2026 05:16 AM

புதுடில்லி: கரப்பான் கட்சிக்கு கிடைத்த மவுசை பார்த்த பா.ஜ., - காங்., கட்சிகள், இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. சமீபகாலமாக, பிரதமர் மோடி, இளைஞர்களை குறிவைத்தே கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதே போல ராகுலும், 'மாணவர்களின் முழக்கம்' என, நாடு தழுவிய பிரசார திட்டத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில், சென்னையில் இந்த பேரணியை நடத்தினார் ராகுல்.
கட்சியில் உள்ள வயதான தலைவர்களை ஓரங்கட்ட ராகுல் முடிவெடுத்துள்ளார். மூத்த தலைவர்கள் கமல்நாத், அம்பிகா சோனியா ஆகியோர் ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டனர். கட்சியின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, 200 இளைஞர்களை சோனியா, ராகுல் ஆகியோர் தேர்வு செய்துள்ளனர். ராகுல், அமெரிக்கா செல்வதற்கு முன், இந்த புதிய பட்டியல் வெளியாகும் என, சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சோனியாவின் பேரனும், பிரியங்காவின் மகனுமான ரேஹான் வாத்ரா குறித்து காங்., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 26 வயதான ரேஹான், ராஜிவ், ராகுல் ஆகியோர் படித்த உத்தரகண்டின் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் படித்தவர். பிரிட்டனின் லண்டனில் உயர்கல்வி படித்துள்ளார். வனவிலங்கு புகைப்பட கலைஞராக உள்ளார். விரைவில் இவர் காங்கிரசில் இணைவார். அதன்பின், இவருக்கு இளைஞர் காங்., பதவி தரப்படும் என, பேச்சு அடிபடுகிறது.
