தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பேவில் வந்துவிட்டது புதிய வசதி

இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பேவில் வந்துவிட்டது புதிய வசதி

இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பேவில் வந்துவிட்டது புதிய வசதி


ADDED : ஆக 31, 2026 04:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 04:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளும் புதிய வசதியை போன் பே (Phone Pe) அறிமுகப்படுத்துகிறது.

நவீன கால உலகில், டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது கட்டாயமாகி உள்ளது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடும், தாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், இதில் முன்னணியில் இருக்கும் போன்பே செயலி, விரைவில் போன்பே 123பே (123Pay) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பான அறிவிப்பையும் போன்பே வெளியிட்டு உள்ளது.

குறைந்த அளவில் 2G இணைப்பு வசதி கொண்ட இடங்களிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுவதை உறுதி செய்ய, நோக்கியா, ஹெச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முதன்முறையாக நுகர்வோர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வது எளிது. 12 மொழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்றும் வழிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளன. விரைவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களும் இந்த வசதியை பெறலாம்.

கேமரா பொருத்தப்பட்டுள்ள போன்கள், க்யூ ஆர் கோடு குறியீடுகளை ஸ்கேன் செய்யவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us