விண்வெளியில் தண்ணீருடன் விளையாடுவது வேடிக்கையானது; அனுபவத்தை வீடியோவாக வெளியிட்ட சுக்லா!
விண்வெளியில் தண்ணீருடன் விளையாடுவது வேடிக்கையானது; அனுபவத்தை வீடியோவாக வெளியிட்ட சுக்லா!
ADDED : நவ 16, 2026 08:15 PM

-நமது நிருபர்-
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்துவிட்டு பூமிக்குத் திரும்பியவர்.
இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் இன்று (நவம்பர் 16) விண்வெளியில் தண்ணீருடன் விளையாடுவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவு: விண்வெளியில் தண்ணீருடன் விளையாடுவது வேடிக்கையானது. ஆனால் சில சமயங்களில், அந்த வேடிக்கையுடன் ஒரு சுவாரஸ்யமான இயற்பியல் பாடமும் இருக்கிறது. இங்கே நீங்கள் காண்பது, நான் ஒன்றாகக் கொண்டுவரும் மிதக்கும் இரண்டு நீர்க் கட்டிகள். அவை தொடும் கணத்தில், ஒரே கட்டியாக ஒன்றிணைகின்றன. பார்ப்பதற்கு இது மிகவும் எளிமையானது, ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் இது மிகவும் கவர்ச்சிகரமானது.
திரவத்தின் நடத்தையை வடிவமைப்பதில் பரப்பு இழுவிசை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நீர் இயற்கையாகவே அதன் மேற்பரப்பைக் குறைத்துக் கொள்ள முனைகிறது, மேலும் அந்த இரண்டு கட்டிகளும் தொடும்போது, பரப்பு இழுவிசை அவற்றை ஒன்றிணைத்து ஒரு பெரிய நீர்த்துளியாக மாற்றுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திரவங்களின் பாகுத்தன்மையை அளவிட, நீர்த்துளிகள் ஒன்றிணைவதைப் பயன்படுத்தும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தண்ணீருடன் விளையாடுவது வெறும் சிறுபிள்ளை விளையாட்டு என்று யார் சொன்னது? சில நேரங்களில், அது அறிவியலின் ஒரு மாறுவேடம். இவ்வாறு சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
