பிரதமர் அதை செய்வதில்லை; ராகுலின் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு சாம் பிட்ரோடா பதில்
பிரதமர் அதை செய்வதில்லை; ராகுலின் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு சாம் பிட்ரோடா பதில்
UPDATED : நவ 14, 2026 12:33 PM
ADDED : நவ 14, 2026 12:31 PM

'பிரதமர் மோடி எனது போனை ஒட்டுக் கேட்கிறார்' என்று ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், 'பிரதமர் அப்படி செய்வதில்லை' என்று காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு நெருக்கமானவர். ஒரு காலத்தில் ராகுலுக்கும் நெருக்கமாக இருந்தவர்தான்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் சாம் பிட்ரோடா, சமீபத்தில் பிரதமர் மோடியுடன் தன் பழைய சந்திப்புகளை நினைவு கூர்ந்திருந்தார்.
அவரது வலை தள பதிவை பார்த்த பிரதமர் மோடி, சாம் பிட்ரோடாவுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'என் மொபைல் போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்' என்று ராகுல் கூறியதற்கு சாம் பிட்ரோடா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
பிரதமர் அதை செய்வதில்லை. பிரதமர் ஒரு ஸ்க்ரூடிரைவர் எடுத்துக்கொண்டு சென்று கம்ப்யூட்டரில் வேலை செய்வதில்லை. ஆனால், எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று நாம் நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.
ஆம். எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. எனது லேப்டாப் தாக்குதலுக்கு ஆளானது. எனது வங்கி கணக்குகள் கண்காணிப்பில் உள்ளன.
நிபுணர்களிடம் ஆலோசித்தேன். அவர்கள் என்னை எச்சரித்தனர்.
யாரோ சிலர் செய்கின்றனர். யாரென்று எனக்குத்தெரியாது. நான் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. நான் வாழ பழகிக்கொண்டேன்.
எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சில மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள், உங்களால் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
