தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான உதவி: பிரதமர் மோடி உறுதி

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான உதவி: பிரதமர் மோடி உறுதி

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான உதவி: பிரதமர் மோடி உறுதி

7


UPDATED : அக் 11, 2026 06:05 PM

ADDED : அக் 11, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

7

UPDATED : அக் 11, 2026 06:05 PM ADDED : அக் 11, 2026 04:10 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

உற்பத்தி துறை

நமது மாநிலங்களை வலிமையானதாக மாற்றி, இந்தியாவை வலிமையானதாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. தமிழகத்தின் உற்பத்திதுறை, சிறுதொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் மீது தேசம் பெருமிதம் கொள்கிறது.மேக் இன் இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பயன் அளிக்கும்.

சாதனை

உலகில் மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2014 முதல் இதுவரை மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 16 மடங்கும், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்தது. பொறியியல் ஏற்றுமதியும் சாதனை படைத்துள்ளது. இதனால் நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இதில் தமிழகத்திற்கு பங்களிப்பு இருக்கிறது.

கப்பல் கட்டுமானத்தின் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் . இதில் தமிழகத்திற்கும் பங்கு உண்டு. கப்பல் கட்டும் துறையில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. 17 ஆயிரம் கோடி ரூபாயில், தூத்துக்குடி வஉசி துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த மெகா கன்டெய்னர் மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.



சென்னை மீன்பிடி துறைமுகம் நவீனமயமாக்கம், தமிழகத்தில் கடற்பாசி மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு உதவுகிறது. விவசாயிகள் கடன் அட்டை, மீனவர்களுக்கும் எளிதாக கிடைக்கிறது. தேசத்தின் மீன்பிடி தொழில் வளர்கிறது. கடந்த ஆண்டில் கடல்சார் ஏற்றுமதி அளவு அதிகரித்தது. இதனால் மீனவர்கள் வாழ்க்கை மேலும் மேம்பட்டது.

வளர்ந்த நாடு

இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் கனவுக்கான பாதையை உருவாக்குகிறது. சாதனை படைக்கும் தமிழகத்தை உருவாக்க விரும்புகிறோம். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உங்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். தமிழக மக்களின் உழைப்பும், ஆற்றலும் தேசத்தின் எதிர்காலத்திற்கு திசை அளிப்பதில் பங்காற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த தமிழகத்தில் இருந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us