தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி

தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி

தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி

5


ADDED : ஜூன் 02, 2026 09:04 AM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஜூன் 02, 2026 09:04 AM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்க, தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலுங்கானா மக்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். தெலுங்கானா மக்கள் தங்கள் படைப்பாற்றலுக்கும், வணிகத் திறமைக்கும் பெயர் பெற்றவர்கள் ஆவர். இம்மாநிலம், துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் போராட்ட உணர்வின் அடையாளங்களாகத் திகழும் ஒரு மகத்தான வரலாற்றையும், புகழ்பெற்ற கலாசாரத்தையும் கொண்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் நமது கனவை நனவாக்க, தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தெலுங்கானா மாநில மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

12 ஆண்டுகள் நிறைவு

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல் முதல்வராக பதவியேற்றார். தற்போது தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us