எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு
எகிப்தில் நாளை கையெழுத்தாகும் காசா அமைதி ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு அழைப்பு
ADDED : அக் 12, 2025 01:18 PM

புதுடில்லி: எகிப்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தது. இதனால் பிரதமர் மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்க உள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் காசாவின் வடக்கு பகுதியை நோக்கி தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன. காசா போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்தில் நாளை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 20 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் பிரதமர் மோடிக்கு நாளை நடைபெற உள்ள மாநாட்டுக்கு எகிப்து அதிபரும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அழைப்பு விடுத்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்க உள்ளார்.
எகிப்தில் நாளை நடக்க அமைதி உச்சி மாநாட்டிற்கு அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா தலைமை தாங்குகின்றனர்.