தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/குஜராத்தில் ரூ. 14,000 கோடி வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் ரூ. 14,000 கோடி வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் ரூ. 14,000 கோடி வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

10


UPDATED : அக் 30, 2026 01:02 PM

ADDED : அக் 30, 2026 01:00 PM

Follow on GoogleFavourite on Google

10

UPDATED : அக் 30, 2026 01:02 PM ADDED : அக் 30, 2026 01:00 PM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் ரூ. 14,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; சில திட்டங்களை துவங்கி வைத்து, அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிஎம்-கிசான் திட்டத்தில் 24வது தவணையாக 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.

ஆமதாபாத் (சபர்மதி) - வாரணாசி விரைவு ரயில் மற்றும் மெஹ்சானா - பெச்சராஜி - சபர்மதி மெமு ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிஎம்-கிசான் திட்டம், கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இன்று 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 18,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பனஸ்கந்தா மாவட்டத்தில், லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 50 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பு, பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன; சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்ற மட்டுமே செய்தன; பாஜ அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், கோதுமை மற்றும் நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம், நாட்டின் மொத்த விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோராக இருக்கும் சிறு விவசாயிகளின் தேவைகள் கண்டுகொள்ளப்படவில்லை; அவர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. பாஜ அரசு சிறு விவசாயிகளின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஏராளமான திட்டங்களை அவர்களுக்கு வழங்கி தேவையான ஆதரவை வழங்கியுள்ளது.

Image 1637968

உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், உரங்களின் விலை பெருமளவு உயர்ந்தது; அந்தச் சுமை விவசாயிகள் மீது தலையின் மீது சுமத்தாமல் அரசு தடுத்தது. இந்தச் சுமையை ஏற்றுக்கொள்வதற்காக அரசு சுமார் 16 லட்சம் கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். கடந்த 12 ஆண்டுகளில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us