sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அம்பேத்கர் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

/

அம்பேத்கர் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

1


UPDATED : டிச 06, 2025 10:07 AM

ADDED : டிச 06, 2025 09:34 AM

Google News

1

UPDATED : டிச 06, 2025 10:07 AM ADDED : டிச 06, 2025 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பார்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசியலமைப்பை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிச.,6ம் தேதி ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பார்லியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் அவரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவை போட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் பதிவில்; ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் தினத்தில் அம்பேத்கரை நினைவுகூர்கிறோம். அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் மற்றும் நீதி, சமத்துவம், அரசியலமைப்பு மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நம்மை தேசிய பயணத்தில் தொடர்ந்து வழிநடத்துகின்றன. கண்ணியம் மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக திகழ்ந்து வருகிறார்.

சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான நடவடிக்கைளில், அவரது கருத்துக்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும், இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் வெளியிட்ட பதிவில்; சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் உருவாக்கிய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான எனது உறுதியை வலுப்படுத்துகிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான கூட்டுப் போராட்டத்தை இந்த நாள் ஊக்குவிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பதிவில்; புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்! எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.

அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அம்பேத்கர் எனும் போராளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!, எனப் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us