தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அக்.,11ல் வருகிறார் பிரதமர் மோடி; தமிழக பயண விபரம் வெளியீடு

அக்.,11ல் வருகிறார் பிரதமர் மோடி; தமிழக பயண விபரம் வெளியீடு

அக்.,11ல் வருகிறார் பிரதமர் மோடி; தமிழக பயண விபரம் வெளியீடு

3


ADDED : அக் 07, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 05:09 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பிரதமர் மோடி வரும் 11ம் தேதி, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உட்பட, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

அவரது சுற்றுப் பயண விபரம்:


பிரதமர் மோடி வரும் 11ம் தேதி காலை, டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு, காலை 10:55 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து காரில், காலை 11:30 மணிக்கு, பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில், போரூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறார். முதல்வர் விஜய் உடன் செல்கிறார்.

மெட்ரோ பயணத்தை முடித்த பின், காரில் சாலை வழியாக, மதியம் 12:25 மணிக்கு, சென்னை ஐ.ஐ.டி., செல்கிறார். அங்கு பகல் 1:45 மணி வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்குள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். நாட்டின் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.

மதியம் 2:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்ட, பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் தொடங்கி வைக்கிறார். கோவை சங்கர நேத்ராலயாவின் பொன்விழா நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பங்கேற்கிறார்.

ஐ.ஐ.டி.,யில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை உயர்திறன் மையத்தை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவடைந்த பணிகளை திறந்து வைக்க உள்ளார்.

மாலை 3:30 மணிக்கு, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அதன்பின் அங்கிருந்து காரில், சென்னை வர்த்தக மையம் செல்கிறார். அங்கு ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளி பொன்விழாவில் பங்கேற்கிறார். மாலை 5:15 மணிக்கு, அங்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின், விமானத்தில் டில்லி செல்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us