வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
ADDED : நவ 07, 2025 08:15 PM

வாரணாசி: தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்தினர். பாஜவினர் திரளானோர் கூடி, பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
நமது நாட்டில் ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை நாளை( நவ.,08) காலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடக்கிறது.
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றடைந்தார். அங்கு அவர் 'ரோடு ஷோ' நடத்தினார். வழிநெடுகிலும் பாஜவினர் ஏராளமானோர், கட்சிக் கொடியுடன் ஒன்று கூடி வரவேற்பு கொடுத்தனர். மோடி பயணித்த கார் மீதும் ரோஜா மலர்களை தூவினர். தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் சென்றார்.

