பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம்; ரூ.13,430 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி நாளை ஆந்திரா பயணம்; ரூ.13,430 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
ADDED : அக் 15, 2025 06:59 PM

புதுடில்லி:ரூ.13,430 கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க, பிரதமர் மோடி நாளை ஆந்திரா செல்கிறார்.
ஆந்திரா செல்லும் பிரதமர் மோடி, நந்தையால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு,ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை நேரில் பார்வையிடுகிறார்.
அதைத்தொடர்ந்து, கர்னூலுக்கு செல்லும் அவர், தொழில், மின்சாரம், சாலை, ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற இருக்கிறார்.