தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிஎன்எஸ் சட்டத்தால் 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்: அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

பிஎன்எஸ் சட்டத்தால் 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்: அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

பிஎன்எஸ் சட்டத்தால் 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்: அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

6


ADDED : அக் 03, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 03:24 PM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போபால்: பிஎன்எஸ் எனப்படும் புதிய குற்றவியல் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட உடன், முதல் தகவல் அறிக்கை முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான வழக்குகள் 3 ஆண்டுகளில் முடித்து வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

போபாலில் புதிய குற்றவியல் சட்டம் குறித்த கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாநாட்டில் பேசியதாவது;

போபாலில் இன்றைய தினம் இரு நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. பிஎன்எஸ் பற்றிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. கால்நடை வளர்ப்போர் மாநாடு நடைபெற்றது. இங்கு பெரியளவிலான கால்நடைகள் வளர்ப்போர் வந்திருப்பது மத்திய பிரதேசத்தில் வர இருக்கும் பால் புரட்சிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 3 ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும். ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் அவர்களின் ஆட்சியை பாதுகாப்பதற்காகவே இருந்தன.

புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய மக்களின் கவுரவம் மற்றும் சொத்து. இந்த சட்டங்களின் அடிப்படை கொள்கை நீதியே தவிர, தண்டனை அல்ல. அவை குற்றம் செய்வதில் இருந்து தடுக்க மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு நம் குற்றவியல் நீதி அமைப்பு மிக நவீன அமைப்புகளில் ஒன்றாக மாறிவிடும்.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us