தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விண்வெளி துறையில் தனியார் துறை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது; மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி துறையில் தனியார் துறை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது; மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி துறையில் தனியார் துறை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது; மயில்சாமி அண்ணாதுரை

3


ADDED : ஆக 16, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஆக 16, 2026 08:34 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: விண்வெளி துறையில் தனியார் துறை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என்று புதுக்கோட்டையில் இஸ்ரோ முன்னாள் தலைவரும் தமிழக அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழுத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:இஸ்ரோவில் பலதரப்பட்ட விண்வெளிகள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனிதனை விண்ணிற்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மத்திய அரசு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது, தனியார் பங்களிப்புடன் இது நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விண்வெளி துறையில் தனியார் துறை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது.

எழுத படிக்க பேச மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு மொழிகளிலும் திறன் பட மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்களுக்கும் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக பல்வேறு முயற்சிகள் விரைவில் எடுக்கப்பட உள்ளது என்று இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us