பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் சிக்கியது: ஆயுதங்கள் பறிமுதல்
பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் சிக்கியது: ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 16, 2026 09:02 PM

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாத மற்றும் கிரிமினல்களுடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கும்பல் பாகிஸ்தானை சேர்ந்த ஷஜாத் பாட்டி மற்றும் அவனது உதவியாளர் அஜ்மல் குஜார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இருவரிடமும் இருந்து, இக்கும்பல் பஞ்சாப் வழியாக ஆயுதங்களை கடத்தி கொண்டு வந்து டில்லியில் விநியோகித்துள்ளனர். இக்கும்பலிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், மொபைல் போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் விரைவாக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, இளைஞர்களை சேர்த்துள்ளனர். மேலும், போதை மருந்து மற்றும் ஆயுதங்களையும் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருக்கும் சதிகாரர்கள் டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 7 பேர் கொண்ட கும்பல் டில்லி, காசியாபாத் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களை சென்று உளவுபார்த்ததுடன், முக்கியமான இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கும்பல் மீது ஏற்கனவே, கொலை,கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
