முதல் போட்டியிலேயே சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்க வீரர்: ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கியது ஐசிசி
முதல் போட்டியிலேயே சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்க வீரர்: ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கியது ஐசிசி
ADDED : செப் 07, 2025 05:28 PM

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிமுகமான போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர் பிரெனெலன் பந்துவீச்சில் குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது பந்துவீச்சை ஆய்வு செய்த பின், அவரை தொடர்ந்து விளையாட ஐசிசி அனுமதி வழங்கியது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் தமிழகத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள். இவர், கடந்த ஆக.,19ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். ஆப் ஸின்னரான அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக களத்தில் இருந்த அம்பயர்கள் புகார் அளித்தனர். முதல் போட்டியில் அவர் 1 விக்கெட் வீழ்த்தினார். ஐசிசி விதிமுறைகளின்படி பவுலர்களின் பந்து வீச்சு குறித்து ஆராய்ந்த போது, பிரெனெலன் சுப்ராயனிடம் குறையை கண்டறிந்தனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் தேசிய கிரிக்கெட் மையத்திற்கு பிரெனெல் சுப்ராயன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடந்த ஆய்வில், அவர் பந்து வீசும் போது, முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு உள்ளேயே இருப்பதும், இது அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் அடங்குவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.