பதவியை உதறிய ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜவில் ஐக்கியம்
பதவியை உதறிய ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜவில் ஐக்கியம்
UPDATED : நவ 02, 2026 02:35 PM
ADDED : நவ 02, 2026 10:21 AM

சண்டிகர்: 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்சியாக ஆளும் ஆம்ஆத்மி 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்தப் பட்டியல் வெளியானதும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேத்தன் சிங் ஜோரமஜ்ரா பதவி ராஜினாமா செய்துள்ளனர். இது ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட உட்கட்சி பூசலை வெளிக்காட்டியுள்ளது.
இன்று ஆம்ஆத்மி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப்பும் ராஜினாமா செய்துள்ளார். இது பஞ்சாப்பை ஆளும் ஆம்ஆத்மிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா குறித்து குன்வர் விஜய் பிரதாப் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப்பக்கத்தில்; நான் பஞ்சாப் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மக்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் எனது கடைசி மூச்சு உள்ளவரை கடமைப்பட்டுள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆம்ஆத்மியில் இணைந்தார். மூவரும் இன்று பாஜவில் இணைந்தனர். டில்லி பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
