இந்திய விமானப்படையில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார் ரபேல் விமானி ஷிவாங்கி!
இந்திய விமானப்படையில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார் ரபேல் விமானி ஷிவாங்கி!
ADDED : டிச 12, 2025 08:21 AM

புதுடில்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் ரபேல் போர் விமானி ஷிவாங்கி சிங், பயிற்சி விமானிகளை தயார்படுத்துவதற்காக இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ரபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும், அதை ஓட்டி வந்து பாராசூட் மூலம் கீழே குதித்த விமானி ஷிவாங்கி சிங்கை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. ஆனால் நம் ஜனாதிபதி முர்மு, விமானி ஷிவாங்கி சிங்குடன் ரபேல் விமானத்தில் பயணம் மேற்கொண்டு, புகைப்படம் எடுத்து பாகிஸ்தானின் பொய்யை அம்பலப்படுத்தினார்.
ஷிவாங்கி சிங், ரபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். வாரணாசியை சேர்ந்த 29 வயது ஷிவாங்கி, 2017 ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். தற்போது ரபேல் விமானங்களை இயக்கி வரும் இவர், முன்னதாக மிக் 21 விமானங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் இந்திய விமானப்படையில் பல சவாலான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
தற்போது ரபேல் போர் விமானி ஷிவாங்கி சிங், பயிற்சி விமானிகளை தயார்படுத்துவதற்காக இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். விமானங்களுக்கு பயிற்சி கொடுத்து, தயார்படுத்தும் பொறுப்பை ஷிவாங்கி ஏற்றுக்கொண்டார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படையில் ஷிவாங்கி முக்கிய பங்கு வகித்ததால், பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

