ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதித்துள்ளார்: பாஜ குற்றச்சாட்டு
ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதித்துள்ளார்: பாஜ குற்றச்சாட்டு
ADDED : அக் 02, 2025 05:53 PM

புதுடில்லி: ராகுல் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை மீண்டும் அவமதித்து உள்ளார். அவர் தேசபக்தியை இழந்துவிட்டார் என பாஜ கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ராகுல் உரையாற்றிய வீடியோவை பகிர்ந்து, பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறார். லண்டனில் நமது ஜனநாயகத்தை அவமதிப்பதில் இருந்து, அமெரிக்காவில் நமது நிறுவனங்களை கேலி செய்வது வரை, இப்போது கொலம்பியாவில், உலகளவில் பாரதத்தை அவமதிக்க அவர் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் அதிகாரத்தை இழந்துவிட்டீர்கள்.
தேசபக்தியை இழக்காதீர்கள். பாஜவை விமர்சிப்பது உங்கள் உரிமையாக இருக்கலாம், ஆனால் உங்கள் மலிவான மற்றும் அற்ப அரசியலுக்காக இந்தியா தாயை அவமதிக்கத் துணிகிறீர்கள். இது கருத்து வேறுபாடு அல்ல. இது அவமானம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.