கரப்பான்களின் போராட்டத்தில் விளம்பரம் தேடும் ராகுல்
கரப்பான்களின் போராட்டத்தில் விளம்பரம் தேடும் ராகுல்
ADDED : அக் 10, 2026 05:34 PM

-நமது நிருபர்-
டில்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான் கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்தால், தனக்கும் விளம்பரம் கிடைக்கும் என்று கருதி, 'போராடுங்கள், உறுதுணையாக இருப்போம்' என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவு; மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை 10 ஆண்டுக்கு மேலாக எதிர்த்து வருகிறேன். எங்களின் எதிரி யார் என்று தெரியும். இவர்களின் குணமே கோழைத்தனம் தான். மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ்குமார், அஜித் தோவல் இந்தக் கதையின் வில்லன்கள்.
50 ஆயிரம் போலீசாரை குவித்தாலும் சரி, அனைத்து தலைவர்களையும், இளைஞர்களையும் கைது செய்தாலும் சரி, இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.
அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களின் குரலை பேணி காக்கவும் உறுதியாக நிற்கிறோம். 10, 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த எதையும் மீண்டும் நிகழாமல் தடுத்து நிறுத்துவோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பார்த்து பெருமையடைகிறேன். தொடர்ந்து போராடுங்கள், உறுதுணையாக இருப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எஸ்ஐஆருக்கு எதிராக 12ம் தேதி இண்டி கூட்டணியினர் டில்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து மனு அளிக்கவும் உள்ளனர்.
