ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்
ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்
UPDATED : நவ 06, 2025 04:38 PM
ADDED : நவ 06, 2025 04:37 PM

புதுடில்லி: 'ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகள் உடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார். ராகுலின் ஹைட்ரஜன் குண்டு, வெறும் ஊசி பட்டாசு.
ராகுலின் செயல்பாடுகளும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போலவே தெரிகிறது. இந்த சர்வதேச சக்திகளும் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அகற்ற முயற்சிக்கின்றன.
ராகுலும் அதையே செய்கிறார். இவ்வாறு பட்னவிஸ் கூறினார். ஏற்கனவே ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

