ரயில் டிரைவர் பெட்டியில் 'ஏசி' :ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ரயில் டிரைவர் பெட்டியில் 'ஏசி' :ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ADDED : மே 23, 2026 03:51 AM

சென்னை; ரயில்வேயில் 'லோகோ பைலட்' எனப்படும் ரயில் ஓட்டுநர்கள் மட்டும், 60,000 பேர் பணிபுரிகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஓட்டுநர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது.
எனவே, அனைத்து ரயில்களின் ஓட்டுநர் அறைகளிலும், 'ஏசி' வசதியை ஏற்படுத்தி, முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள், கடந்த வாரம் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, அனைத்து ரயில்களிலும், ஓட்டுநர் பெட்டியில், 'ஏசி' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'ரயில்வேயில் புதிதாக வரும், அனைத்து விரைவு, மின்சார ரயில் இன்ஜின்களிலும், ஓட்டுநர் பெட்டியில், 'ஏசி' வசதி இருக்கிறது. எஞ்சியுள்ள ஒரு சில, பழைய ரயில் இன்ஜின்களிலும், ஓட்டுநர்கள் இருக்கும் பெட்டியில், 'ஏசி' வசதி ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.
