திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றார் ராஜேஷ் : கேரளாவில் வரலாறு படைத்த பாஜ
திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றார் ராஜேஷ் : கேரளாவில் வரலாறு படைத்த பாஜ
ADDED : டிச 26, 2025 04:24 PM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் ஆக பாஜவின் ராஜேஷ் பதவியேற்றுக் கொண்டார்.
மொத்தம் 101 வார்டுகளை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா 50 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மேயர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் பாஜ சார்பில் விவி ராஜேஷ், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்பி சிவாஜி மற்றும் காங்கிரசின் சபரிநாதன் ஆகியோர் களமிறங்கினர்.
இன்று நடந்த தேர்தலில் ராஜேஷூக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், சிவாஜிக்கு 29, சபரிநாதனுக்கு 19 பேரின் ஆதரவும் கிடைத்தது. ஒரு சுயேச்சை கவுன்சிலர் ராஜேஷ்க்கு ஆதரவு தெரிவித்தார். மற்றொரு கவுன்சிலர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு பிறகு ராஜேஷ் நிருபர்களிடம் கூறியாவது: நாம் அனைவரும் ஒன்றிணைத்து, ஒன்றாக முன்னேறி செல்வோம். 101 வார்டுகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தப்படும். திருவனந்தபுரம் வளர்ந்த நகரமாக மாற்றப்படும்,'' எனத் தெரிவித்தார்.
கேரள சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறது. அக்கட்சியின் ஓ . ராஜகோபால் கடந்த 2016 ம்ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மெமோம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2024 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். அந்த வரிசையில் தற்போது வி.வி.ராஜேஷ் முதல் முறையாக திருவனந்தபுரம் மேயர் ஆக பதவியேற்றுள்ளார்.

