தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரிமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு அபார வெற்றி

பிரிமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு அபார வெற்றி

பிரிமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு அபார வெற்றி


UPDATED : ஏப் 27, 2026 10:17 PM

ADDED : ஏப் 27, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2026 10:17 PM ADDED : ஏப் 27, 2026 09:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டில்லியில் நடந்த போட்டியில் டில்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய டில்லி அணி சரிவை சந்தித்தது. அந்த அணி பவர் பிளேவில் 6 விக்கெட் இழப்புக்கு 13 ரன் மட்டுமே எடுத்தது. ஷகில் பரக் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் 1, நிதிஷ் ராணா 1, ஷமீர் ரிஜ்வி 0, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5, அக்சர் படேல் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் பவர் பிளேயில் குறைவான ரன் எடுத்த அணி என்ற பெயரை டில்லி அணி பெற்றது.

இதன் பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து ரன் சேர்க்க துவங்கினர். இதனால், அந்த அணியின் ரன் 50 ஐ கடந்தது. இருப்பினும் டேவிட் மில்லர் 19 ரன்னிலும், ஜேமிசன் 12 ரன்னிலும், குல்தீப் யாதவ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அபிஷேக் போரல் மட்டும் ஓரளவு விளையாடி 30 ரன் எடுத்து அவுட்டாக டில்லி அணி 75 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியின் ஹாசில்உட் 4, புவனேஸ்குமார் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்த 76 ரன் என்ற எளிதான வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது . துவக்க வீரர்களாக வந்த ஜேக்கப் பெத்தெல் மற்றும் விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடினர், பெத்தெல் 20 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 6.3 ஓவரில் 77 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி 25, படிக்கல் 34 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us