தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: மத்திய அரசு

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: மத்திய அரசு

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: மத்திய அரசு

8


ADDED : ஜூலை 23, 2026 04:29 PM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : ஜூலை 23, 2026 04:29 PM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சிஜேபி இயக்கத்தினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் எனக்கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நேற்று மதியம் முதல் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினரின் பிரதிநிதிகளிடம், பேச்சுவார்த்தைக்கு தயார் என முறையாக நான்கு முறை அரசு அழைப்பு அனுப்பி உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும், உங்களுக்கு ஏற்ற இடத்தில், எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார். இது இளைஞர்கள் அனைவருக்குமான அழைப்பு.

ஜேபி நட்டா அலுவலகம் அல்லது இல்லத்தில் என எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடக்கலாம். நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.ஆலோசனையில் அமைச்சர் நட்டாவும்,நானும் பங்கேற்போம். ஆலோசனையில் தீர்வு நோக்கி முன்னேறுவோம். மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கை ஆகும். மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us