எண்ணெய் பயன்பாட்டை 10% குறையுங்கள்; 'மன் கி பாத்' உரையில் மக்களுக்கு மோடி அறிவுரை
எண்ணெய் பயன்பாட்டை 10% குறையுங்கள்; 'மன் கி பாத்' உரையில் மக்களுக்கு மோடி அறிவுரை
ADDED : நவ 29, 2026 12:30 PM

புதுடில்லி: ''எனது அன்பான நாட்டு மக்களே, வணக்கம். மீண்டும் ஒருமுறை 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்” என்று கூறி பிரதமர் மோடி உரையை துவங்கினார்.
அவர் பேசியதாவது: மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து பகுதிகளிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் படைத்துள்ள சாதனைகளை வெளிக்கொண்டு வருகிறது. சமூகத்தின் சவால்கள் குறித்து விவாதிப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இந்திய இளைஞர்களின் திறமைகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. இளைஞர்கள் தங்களது கனவுகளை நனவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். போதை பழக்கம் அவர்களின் இலக்குகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மன உறுதி
போதை பழக்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் சமூகத்தின் பங்களிப்பும், ஈடுபாடும் அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் இல்லாத இளைஞர்களை கொண்ட இந்தியாவை உருவாக்கும் இயக்கம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையான பல இளைஞர்கள் தங்களது மன உறுதியால் அதில் இருந்து மீண்டு, கடினமான சூழ்நிலைகளையும் எதிர்க்கொண்டு வாழ்க்கையை புதிய பாதையில் வழி நடத்தி வருவது ஊக்கமளிக்கிறது.
புதிய விஷயங்கள்
மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அரசு ஊழியர்களும் iGOT கர்மயோகி தளத்துடன் இணைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் பலர் 20 முதல் 25 ஆண்டுகள் வரை அரசு பணியில்அனுபவம் பெற்றவர்கள். தங்களது பொறுபபுகளை நிறைவேற்றுவதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.
வாழ்த்துக்கள்
தொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்க மத்திய அரசின் 'சஞ்சார் சாத்தி' செயலி பெரிதும் உதவும். 8வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை தெலுங்கானாவில் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டில் சாக்லேட் மற்றும் கோகோ சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகங்கள் புதிய சாக்லேட் சுவைகளை உருவாக்குவதற்காக உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு பரிசோதித்து வருகின்றனர்.
உடல் பயிற்சி
விவசாயிகள், பெண்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் துவங்கியதால் மக்கள் அனைவரும் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் பயன்பாட்டை மக்கள் 10% குறைக்க வேண்டும். பெரிய சவாலாக இருந்து வரும் உடன் பருமன் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கு மக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு முக்கிய மெசேஜ்; பிரதமர் மோடி உரை தமிழில் தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
