அக்., 1 முதல் விரைவு தபால் மட்டுமே: திருத்தப்பட்ட கட்டணம் அறிவிப்பு
அக்., 1 முதல் விரைவு தபால் மட்டுமே: திருத்தப்பட்ட கட்டணம் அறிவிப்பு
ADDED : செப் 28, 2025 05:30 AM

தபால் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டு, அக்டோபர், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதனால், விரைவு தபால் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு, 19 ரூபாய், 200 கி.மீ., வரை 47 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து, 2,000 கி.மீ., வரை 47 ரூபாய்.
அதே நேரத்தில், 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூரில் 24 ரூபாய், 200 கி.மீ., வரை 59 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 63 ரூபாய், 501 கி.மீ.,ல் இருந்து 1,000 கி.மீ., வரை 68 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 72 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 77 ரூபாய்.
இதற்குமேல், 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை, உள்ளூரில் 28 ரூபாய், 200 கி.மீ.,க்குள் 70 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 75 ரூபாய், 501 கி.மீ., இருந்து 1,000 கி.மீ., வரை 82 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 86 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 93 ரூபாய்.
உரியவரிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடம் தபால் சேர்க்கவும், உரியவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில், தபால் பெற உரியவரை நியமிக்காத நிலையில், ஓ.டி.பி., பெற்று தபால்களை சேர்க்கவும், தனித் தனியாக, 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள், அக்டோபர், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என, தபால்துறை அறிவித்துள்ளது
- நமது நிருபர் -.