பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் 'குட்பை' சொன்ன லாலு வாரிசு
பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் 'குட்பை' சொன்ன லாலு வாரிசு
ADDED : நவ 15, 2025 04:58 PM

பாட்னா: பீஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அரசியலில் இருந்து விலகுவதாக லாலுவின் மகளும், கட்சியின் நிர்வாகியுமான ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
பீஹார் தேர்தல் படுதோல்வி எதிர்க்கட்சிகளை கலகலக்க வைத்துள்ளது. குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பல்வேறு முணுமுணுப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தோல்விக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அனைத்து பழிகளையும் ஏற்றுக் கொள்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். சஞ்சய் யாதவ், ரமீசும் இதைச் செய்ய சொன்னார்கள். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தமது பதிவில் கூறி உள்ளார்.

