ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை
ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை
ADDED : அக் 30, 2025 12:02 AM

அயோத்தி: உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது.
கடந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், நவ.,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

