தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரூ. 4 ஆயிரம் லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

 ரூ. 4 ஆயிரம் லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

 ரூ. 4 ஆயிரம் லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

7


ADDED : செப் 03, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

7

ADDED : செப் 03, 2026 07:53 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பட்டா வழங்க ஐ.டி., ஊழியரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., யாசியாபானு 45, கைது செய்யப்பட்டார்.

மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி., ஊழியர். கடந்தாண்டு அப்பகுதியில் தன் பெயரிலும், மனைவி புஷ்பலதா 28, பெயரிலும் இரு மனைகளை வாங்கி, பத்திரப்பதிவு செய்தார்.

ஆனால் மனைவி பெயரில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. தன் பெயரில் பட்டா கேட்டு வருவாய்த்துறைக்கு ஆன்லைனில் மதுமித்ரன் விண்ணப்பித்தார். அவரை தொடர்புக்கொண்ட வேடர்புளியங்குளம் வி.ஏ.ஓ., யாசியாபானு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். 'பேச்சுவார்த்தைக்கு' பின் ரூ.4 ஆயிரம் கேட்டார்.

இது குறித்து லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் மதுமித்ரன் புகார் செய்தார். இதற்கிடையே இன்று மதியம் அலைபேசியில் தொடர்பு கொண்ட மதுமித்ரனிடம், பசுமலை மூலக்கரை ஸ்டாப் அருகே காத்திருக்குமாறு யாசியாபானு தெரிவித்தார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்து மதுமித்ரனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி அதை தனது ஸ்கூட்டியில் வைத்தபோது அவரை இன்ஸ்பெக்டர் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூரியகலா, ஜெயப்ரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us