தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ்; மோகன் பாகவத்

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ்; மோகன் பாகவத்

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ்; மோகன் பாகவத்

9


ADDED : ஜூன் 13, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

9

ADDED : ஜூன் 13, 2026 07:16 PM


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: 'ஆர்எஸ்எஸ் உலகின் மிக பெரிய அமைப்பு. அதே நேரத்தில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்புகளில் ஒன்று' என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரளாவுக்கு 3 நாள் பயணமாக அதன் தலைவர் மோகன் பாகவத் வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;

ஆர்எஸ்எஸ் உலகின் மிக பெரிய தன்னார்வ அமைப்பு. அதே நேரத்தில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்புகளில் ஒன்று. சீருடை அணிந்த அமைப்பினர் நடத்தும் அணிவகுப்புகளின் காரணமாக இந்த அமைப்பு வெளியாட்களுக்கு ஒரு துணை ராணுவ அமைப்பாக தெரியலாம். பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதால் உடற்பயிற்சிக் கூடமாகவும் தோன்றலாம்.

எங்கள் செயல்பாடுளில் 100வது ஆண்டில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். அதே சமயத்தில் மீண்டும் மக்களை சந்தித்து சங்கம் குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த அமைப்பை நாம் பெரும்பான்மையான தருணங்களில் ராஜாராம் மோகன்ராயுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறோம். நாடு முழுவதும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது. சமுகத்தின் எந்த ஒரு பிரிவினருக்கோ, எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ எதிரானது அல்ல.

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us