தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 பைசா அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 பைசா அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 பைசா அதிகரிப்பு


ADDED : நவ 23, 2026 12:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 12:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (நவம்பர் 23) 23 பைசா உயர்ந்து, 8 மாதங்களில் இல்லாத உச்சபட்ச அளவான ரூ.92.85 என்ற நிலையை எட்டியது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான முதலீடு அதிகரித்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுவது உள்ளிட்டவை தான் ரூபாய் மதிப்பு அதிகரிப்புக்கு காரணமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான தலையீடும், டாலருக்கான தேவையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ரூபாய் மதிப்பு உயர்வுக்கு மற்றொரு காரணமாகும். இந்திய ரூபாய் மதிப்பின் உயர்வுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 10ம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக ரூபாய் மதிப்பு 93 என்ற அளவை நெருங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us