வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
UPDATED : டிச 10, 2025 02:14 PM
ADDED : டிச 10, 2025 02:10 PM

மாஸ்கோ: இந்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் புடின், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையை பாராட்டி கருத்து தெரிவித்து உள்ளார்.
அண்மையில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார். இந்த சூழலில் தனது இந்திய பயணத்தை நினைவு கூர்ந்து ரஷ்ய அதிபர் கூறியதாவது: நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். 150 கோடி மக்கள் அங்கு வசிக்கிறார்கள். அனைவரும் இந்தி பேசுவதில்லை. 50 கோடி பேர் மட்டும் ஹிந்தி பேசுகிறார்கள்.
மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பது நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இந்தியாவின் கலாசாரம் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு இந்திய வருகை குறித்து புடின் பேசி உள்ளார். பிரதமர் மோடி உடனான விரிவான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புடின் பாராட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

