மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி
மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி
ADDED : அக் 22, 2025 07:05 PM

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யநாதெல்லா 2025ம் ஆண்டில் 96.5 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 846 கோடி ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யநாதெல்லா கடந்த 2014 ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவியேற்றார். அவரது தலைமையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடிகட்ட பறக்க துவங்கியது. லிங்க்ட் இன் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை கையகபடுத்தியதுடன், ஓபன் ஏஐ உடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்து மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் ஏஐ வசதியை கொண்டு வருவதற்கும் சத்யநாதெல்லாவின் பங்கு மிக முக்கியமானது.
2025 ம்ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை 25 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் கிடைத்த வருமானம் குறித்த அறிக்கையை அடுத்த வாரம் இந்த நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2025ம் ஆண்டில் சத்யநாதெல்லாவுக்கு கிடைத்த வருமானம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.இதன்படி கடந்த 2024 ம் ஆண்டு அவருக்கு 79.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 694 கோடி ரூபாய்) வருமானம் கிடைத்த நிலையில் 2025 ல் 84 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.
அதில், பங்குகள் மூலம் 84 மில்லியன் டாலரும்( 736 கோடி ரூபாய்), ஊக்கத்தொகை மூலம் 9.5 மில்லியன் டாலரும்( 83 கோடி ரூபாய்), அடிப்படை வருமானம் மூலம் 2.5 மில்லியன் டாலரும்(21 கோடி ரூபாய்) அவருக்கு கிடைத்துள்ளது.
அவரை தவிர்த்து தலைமை நிதி அதிகாரி எமி ஹூட்டுக்கு 29.5 மில்லியன் டாலரும்( இந்திய மதிப்பில் 258 கோடி ரூபாய்)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட ஜட்சன் அல்தோப்புக்கு 28.2 பில்லியன் டாலரும்( இந்திய மதிப்பில் 247 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.