தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காலை உணவு திட்டம் மேம்படுத்தப்படும்: பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன்

காலை உணவு திட்டம் மேம்படுத்தப்படும்: பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன்

காலை உணவு திட்டம் மேம்படுத்தப்படும்: பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன்


UPDATED : மே 26, 2026 06:17 AM

ADDED : மே 26, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 06:17 AM ADDED : மே 26, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் மேம்படுத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, தேர்வு செய்யப்பட்ட ஆறு தையல் ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். அப்போது, அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில், பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறைகளில் கதவு மற்றும் தண்ணீர் வசதி, கட்டடங்களின் உறுதித்தன்மை, உயர்தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றையும், சீருடை, இலவச பாடப்புத்தகங்களையும், தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம்.

வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு நிறுவனத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தப்பின், பள்ளி திறப்பில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரின் பாதுகாப்பும், நம்பிக்கையும் முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளோம். அனைத்து தரப்பினரின் பிரச்னைகளும், சிறப்பு குறைதீர் முகாம் வாயிலாக ஆராயப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கியமாக ஓய்வூதியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பிரச்னைகளை, அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை உணவு திட்டத்தில், தரமின்மையை தடுக்கவும், சத்து நிறைந்த உணவு, மாணவர்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், உணவு வகைகளில் மாற்றம் செய்யப்படும்.

மாணவ - மாணவியருக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்தால், அவர்கள் தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு சார்ந்த இலவச தொலைபேசி எண்களை அனைத்து பாடப்புத்தகங்களிலும் அச்சிட்டுள்ளோம்.

அதேபோல், ஜாதி, சமயம் சார்ந்த அடையாளத்துடன் எந்த நடவடிக்கைகளும் பள்ளிகளில் நடக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us