தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/10 மாணவர்கள் இருந்தால் பள்ளிகள் இயங்கும்; ராஜ்மோகன்

10 மாணவர்கள் இருந்தால் பள்ளிகள் இயங்கும்; ராஜ்மோகன்

10 மாணவர்கள் இருந்தால் பள்ளிகள் இயங்கும்; ராஜ்மோகன்

4


ADDED : ஆக 10, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஆக 10, 2026 07:53 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''மூடப்பட்ட பள்ளிகளில், 10 மாணவர்கள் சேர்ந்தால் அவை மீண்டும் இயங்கும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பாஜ.,- எம்.எல்.ஏ., போஜராஜன்: முதல்வர் விஜய்க்கு வேட்டி, சட்டை நன்றாக உள்ளது. உதகமண்டலம் தொகுதியில், போதிய அளவில் மாணவர்கள் இல்லை என, மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கே சிலர் பா.ஜ., இருக்கக் கூடாது என்றனர். அவ்வாறு இருக்கக்கூடாது என்றால், அவர்கள் வேறு தேசத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த அரசு விடியல் என்பதை வெற்றியாக மாற்றியுள்ளது. அதேபோல, ஒன்றியம் என்பதையும், மத்தியாக மாற்ற வேண்டும்.

அமைச்சர் ராஜ்மோகன்: எந்த அரசு பள்ளியும் மூடப்படவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை கண்டறிய, வீடு, வீடாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர்களின் பிரச்னையை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்து மாணவர்கள் சேர்ந்தால் கூட, பள்ளி மீண்டும் செயல்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us