ADDED : ஜூலை 09, 2026 09:23 PM

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையால் போலீஸ் எஸ்.ஐ., மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனத்தில் எஸ். ஐ., யாக இருப்பவர் சத்தியமூர்த்தி 59. பெண் மாயமான வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க மானாமதுரை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞரின் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் ஜி.பே., யில் முதலில் ஒரு தொகை அனுப்பியுள்ளனர். மீண்டும் பணம் கேட்டதையடுத்து மாலை திருப்புவனம் பைபாஸ் ரோடு ஓட்டலில் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் எஸ்.ஐ., சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள பட்டாவில் உட்பிரிவில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். தலையாரி கணேசன் 53, மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மாற்றி தருவதாக தெரிவித்துள்ளார். ஊர்காவலன் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் செய்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வைத்து பணம் பெற்ற போது இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் கணேசானை கைது செய்தனர்.
