எஸ்ஐஆர் பணி எதிரொலி; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
எஸ்ஐஆர் பணி எதிரொலி; மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
ADDED : டிச 16, 2025 04:35 PM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதில், 58 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 11ம் தேதி முடிவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு போன்ற பிற காரணங்களால், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்னர்.
24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர், 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். 12.20 லட்சம் வாக்காளர்கள் முகவரியில் இல்லை.1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியல் அடிப்படையில், ஜனவரி 15ம் தேதி வரை, வாக்காளர் பெயர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான கோரிக்கைகள் பெறப்பட உள்ளன. விசாரணை மற்றும் சரிபார்ப்பு ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும்.

