உள்ளடக்கத்திற்கு செல்ல

திறமையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை; பிரதமர் மோடி உறுதி
திறமையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை; பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 26, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
-நமது நிருபர்-
மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 'பிரகதி' எனப்படும் ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நடந்தது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
'பிரகதி' எனப்படும் ஆய்வுக் கூட்டத்தில் 78 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சாலைகள், ரயில்வே, எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகள் இதில் அடங்கும்.
இந்தியாவில் உள்ள ஐடிஐ சூழலமைப்பு மற்றும் பிஎம்-சேது திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திறமையை மேம்படுத்துவது எங்களது மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
